×

எனது மகளுடன் பேசிக்கொண்டே இருக்கிறேன்: விஜய் ஆண்டனி உருக்கம்

சென்னை: விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தன் மகளின் இறப்புக்குப் பிறகு விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டிவிட்டினை வெளியிட்டுள்ளார். உயிரிழந்த தனது மகள் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், ‘என் மகளுடன் சேர்ந்து நானும் இறந்துவிட்டேன்.என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட்டு சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குத்தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளூக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post எனது மகளுடன் பேசிக்கொண்டே இருக்கிறேன்: விஜய் ஆண்டனி உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Antony Urukkam ,Chennai ,Vijay Antony ,Meera ,Tamil Nadu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch